தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மிகுந்த மரியாதையுடன் பார்க்கப்படும் நடிகர்களில் முக்கியமானவர் அஜித்குமார். தனது நடிப்பு திறமையால் மட்டுமல்லாமல், எளிமையான குணம், மனிதநேய மனப்பான்மை மற்றும் பிறருக்கு உதவும் தன்மை ஆகியவற்றால் அவர் பலரின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

திரையுலகில் பலரும் அவரைப் பற்றி நேர்மையான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிலையில், தற்போது நடிகரும் இயக்குநருமான சிங்கம்புலி பகிர்ந்த நினைவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சிங்கம் புலி, அஜித் குமார் குறித்து சில சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, 'Red' திரைப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார். அந்த சம்பவம் அஜித்தின் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
அந்த அனுபவத்தை பற்றி பேசுகையில் சிங்கம் புலி, “ரெட் படப்பிடிப்பின் போது தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் பணத்தை இழந்தபோது, அவரைத் திட்ட வேண்டாம் எனக் கூறி அஜித் சார் உதவினார். அதேபோல், படப்பிடிப்பில் தான் என்ன சாப்பிடுகிறாரோ? அதேயேதான் அங்கிருக்கும் கடைநிலை ஊழியர் வரை அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். குறிப்பாக, கல்விக்காக யாராவது உதவி என்று கேட்டால், மறுபேச்சின்றி உடனடியாக செய்து விடுவார். எதையும் விளம்பரத்திற்காக அவர் செய்யவில்லை.” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் அஜித்தின் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் ஒரு சிறிய உதாரணமாக விளங்குகிறது.
Listen News!