• May 05 2024

மீண்டும் பத்து தல படத்தின் ஷுட்டிங்கில் இணைந்த சிம்பு- படப்பிடிப்பு எங்கு நடைபெறுகின்றது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து சிம்பு பத்து தல என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகின்றது.

இப்படத்தை, 'சில்லுன்னு ஒரு காதல்' கிருஷ்ணா இயக்கி வருகிறார். சிம்பு,வுடன் கெளதம் கார்த்திக், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகின்றனர். 'பத்து தல' படத்தில் ஏ.ஜி.ஆர் என்ற கேங்ஸ்டராக சிம்பு நடித்து வருவதால், அவரது ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். 


ஏற்கனவே இப்போது தான் வெந்து தணிந்தது காடு படத்தில் முத்து என்ற கேங்ஸ்டர் ரோலில் அதகளம் செய்திருந்தார்.'பத்து தல' படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருவது, பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், வெந்து தணிந்தது காடு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சிம்பு படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில், இன்றுமுதல் மீண்டும் பத்து தல ஷூட்டிங் தொடங்கியுள்ளது. 


கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நேற்று ஷூட்டிங் தொடங்கியதை இயக்குநர் கிருஷ்ணா உறுதி செய்துள்ளார். தொடர்ந்து 30 நாட்கள் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பத்து தல திரைப்படம் டிசம்பர் 14ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், டீசர் தீபாவளிக்கு வெளீயாகும் என்றும் புதிய தகவல் கிடைத்திருக்கின்றது.




Advertisement

Advertisement

Advertisement