• Apr 27 2024

வெளியாகும் முன்னமே வியாபாரத்தில் பட்டையைக் கிளப்பும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் முத்திரையைப் பதித்த நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகமாக காணப்படுகின்றது.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.அப்படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான ப்ரின்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். 


பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.இந்நிலையில் தற்போது ப்ரின்ஸ் திரைப்படத்தின் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.அதாவது ப்ரின்ஸ் திரைப்படம் தற்போது வரை ரூ. 90+ கோடி அளவில் வியாபாரம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் தெலுங்கு திரையரங்க உரிமையும் நன்றாக வியாபாரம் ஆகினால், சிவகார்த்திகேயன் முதல் 100 கோடி வியாபாரமான திரைப்படம் ப்ரின்ஸ் தான் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement