• Oct 03 2026

குழந்தைகளை சமாளிப்பது எப்படி.? ஃபஹத் பாசில் சொன்ன பதில்.! வைரலான பதிவு

shali / 48 minutes ago

Advertisement

Listen News!

நடிகர் ஃபஹத் பாசில் தனது மனைவி நஸ்ரியா நசீம் குறித்து பேசிய சுவாரஸ்யமான கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஃபஹத் பாசில், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தனது வித்தியாசமான கதைத்தேர்வு மற்றும் இயல்பான நடிப்பால் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், நடிகை நஸ்ரியா நசீமை திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் திரையுலகில் பிரபலமான ஜோடியாகவும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகளை சமாளிப்பதில் எப்படி இவ்வளவு பொறுமையாக இருக்கிறீர்கள் என மக்கள் தன்னிடம் கேட்பதாக ஃபஹத் பாசில் தெரிவித்துள்ளார். அதற்கு தான் கூறும் பதில் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட கருத்து தற்போது ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.

இதுகுறித்து அவர், “நான் ஒரு குழந்தையைத் தான் திருமணம் செய்திருக்கிறேன். குழந்தைகளை சமாளிப்பதில் எப்படி இவ்வளவு பொறுமையாக இருக்கிறீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். அதற்கு, என் வீட்டிலேயே ஒரு குழந்தை இருக்கிறது; அதை தினமும் சமாளித்துக்கொண்டு தான் இருக்கிறேன் என்று சொல்வேன்” என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

நஸ்ரியாவை குழந்தையுடன் ஒப்பிட்டு ஃபஹத் பாசில் கூறிய இந்த கலகலப்பான கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கணவன்–மனைவி இடையேயான நெருக்கத்தையும், அவர்களுக்குள் இருக்கும் ஜாலியான உறவையும் இந்த கருத்து வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement