• May 11 2024

ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஷாருகான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமது இயல்பான நடிப்பினால் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் பாலிவூட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் தான் நடிகர் ஷாருகான்.

இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து தற்பொழுது இளம் இயக்குநரான அட்லி இயக்கத்தில் ஓர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகின்றார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் படத்திலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் தலைப்பு ’டன்கி’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இன்றைய தினம் ரம்ழான் பண்டிகை என்பதால் இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் சிறப்பான கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் ,நடிகர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களுடன் நடிகர் ஷாருக்கான் செல்பி எடுத்துள்ளார் .அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷாருக்கான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement