• Jul 27 2024

கோட் படம் தொடர்பில் அடுத்தடுத்து வெளியான மாஸ் அப்டேட்! ஓவர் ஸ்பீட்டில் வெங்கட் பிரபு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

இளையதளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை விஜயுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா என லீடிங் நட்சத்திரங்கள் நடித்து வருவதால் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அஜித் நடித்த மங்காத்தா படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருவதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு  காணப்படுகின்றது.

இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 


இந்த நிலையில், தற்போது ,கோட் படத்தின் 50 சதவிகித டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் எதிர்வரும் 15 ஆம் தேதிக்குள் விஜய் தொடர்பான படத்தின் காட்சிகள் நிறைவு செய்ய வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாகவும், இதன் ரிலீஸ் செப்டம்பர் 5ஆம் தேதி என அறிவிப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷனையும் துரிதப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதம் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கோட் படத்தின் இரண்டாவது செசிங்கிள் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement