• Jan 19 2025

என் பெயர நம்பி யாரும் ஏமாந்துறாதீங்க... பிரபல காமெடி நடிகர் திடீர் பேச்சு

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக காணப்படுபவர் தான் சிங்கம்புலி. இவர் மாயாவி, ரெட் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார்.

அத்துடன், நடிகர் விமல், பிந்துமாதவி நடிப்பில் வெளியான தேசிங்குராஜா படத்திலும் இவர் காமெடியில் கலக்கி இருப்பார். இறுதியாக வெளியான அரண்மணை 4 படத்திலும் நடித்திருப்பார்.

இந்த நிலையில், சிங்கம்புலியின் பேஸ்புக் கணக்கொன்று போலியாக ஆரம்பிக்கப்பட்டு அதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதற்கு தேவைப்படும் பணத்திற்கு உதவி செய்யுமாறும் விளம்பரம் ஒன்று செய்யப்பட்டு உள்ளது.


இந்த விளம்பரம் இணையத்தில் வைரலாக, அது தொடர்பில் சிங்கம் புலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


குறித்த வீடியோவில், தனது பெயரில் போலியான முகநூல் பக்கம் ஆரம்பித்து ஒரு சிலர் தனக்கு உடல்நலம் இல்லை என பணம் வசூல் செய்வது குறித்து கேள்விப்பட்டேன். எனக்கு உடல்நலம் இல்லை என்பது முழுக்க முழுக்க பொய், நான் நன்றாக தான் இருக்கிறேன், நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, எனவே இது போன்ற போலியான விளம்பரங்களை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம்’ என்றும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement