• Jan 19 2025

செல்வராகவன் இதுவரை கண்ணில் பார்க்காத சம்பளம்.. சன் பிக்சர்ஸ் இடம் பேசி வாங்கி கொடுத்த தனுஷ்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் செல்வராகவனுக்கு  நடிகர் தனுஷ் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மிகப்பெரிய சம்பளம் வாங்கி தந்துள்ளதாகவும் அவர் ஒரு முழு படத்தை இயக்குவதற்கு வாங்கிய சம்பளத்தை விட இரு மடங்கு சம்பளமாக ’ராயன்’ படத்தின் மூலம் அவருக்கு கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷின் 50வது திரைப்படமான ’ராயன்’ படத்தை அவரே இயக்கி வருகிறார் என்பதும் அதில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோவுக்கு இணையாக ஒரு சூப்பர் கேரக்டர் ஒன்று இருந்ததை அடுத்து அந்த கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்று அனைவருக்கும் ஆச்சரியம் இருந்த நிலையில் தனுஷ், செல்வராகவனை தேர்வு செய்தார்.

முதலில் இந்த கேரக்டரில் நடிப்பதற்கு செல்வராகவன் சம்பளம் எதுவும் பேசவில்லை என்றும் தம்பி பார்த்து ஏதாவது ஒரு தொகை வாங்கி கொடுப்பார் என்று அந்த கேரக்டரில்  நடித்ததாகவும் தெரிகிறது.



இந்த நிலையில் செல்வராகவன் கேரக்டரின் முக்கியத்துவத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் விளக்கிய தனுஷ் அவருக்கு ஒரு மிகப்பெரிய சம்பளம் வாங்கி கொடுத்ததாகவும் அவர் அதிகபட்சமாக இதுவரை படங்கள் இயக்குவதற்கே ரூ.3 கோடி வாங்கிய நிலையில் அவருக்கு கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷ் கேட்டுக் கொண்டதற்காக அந்த பணத்தை யோசிக்காமல் செல்வராகவனுக்கு கொடுத்து விட்டதாகவும் இந்த படம் நிச்சயம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் தனுஷ் ஒரு கணிசமான சம்பளத்தை வாங்கி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement