• Feb 05 2025

ரொமான்ஸில் கலக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் முத்து..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த வருடம் தமிழ் சின்னத்திரையில் திருமண பந்தத்தில் இணைந்த பிரபல ஜோடிகள் பலர் இருந்தனர். அதில் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி என்ற ஜோடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் முத்துக்குமார் எனும் கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி வசந்த் பொன்னி என்ற தொடரில் நாயகியாக நடித்த வைஷ்ணவியை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் திருமணம் தமிழ் சின்னத்திரை உலகில் பேசப்படும் நிகழ்வாக மாறியது.


இவர்களது காதல் திருமணம் சின்னத்திரையினருக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்ததுடன் மிகவும் எளிமையாக நடந்த இவர்களது திருமண விழாவிற்கு நடிகர் நடிகைகள் என பலர் கலந்திருந்தனர்.சமூக வலைத்தளங்களில் ரொம்பவும் சுறு சுறுப்பாக இருக்கும் வைஷ்ணவி தனது கணவருடன் ரொமான்ஸ் பண்ணிய புகைப்படம் ஒன்றினை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.


இவர்கள் தங்கள் நியூஇயர் ஸ்பெஷலாக ஒரு ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அவர்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement