• Apr 30 2024

செம்ம கூலாக “ரா ரா ரங்கம்மா” பாடலுக்கு நடனம் ஆடிய ஈரமான ரோஜாவே சீரியல் மீனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை மீனா வேமுரி.இவர் சன்டிவி ஷு தமிழ் விஜய்டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2சீரியலில் ஜீவா மற்றும் பார்த்தியின் அம்மாவாக நடித்து வருகின்றார். இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும்.

அந்த வகையில் ஈரமான ரோஜாவே சீரியலில் 2 மகன்களுக்கு அம்மாவாக, பிரியா, காவ்யாவுக்கு மாமியாராக பார்வதி என்ற ரோலில் நடிப்பவர் சின்னத்திரை நடிகை மீனா வேமுரி.தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடிக்கிறார். குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருப்பார்.

சீரியலில் மெச்சூரான ரோலில் நடித்தாலும் ரியல் லைஃப்வில் மீனா மிகவும் மாடர்னான பெண்மணி. செம்ம ஸ்கூலாக விதவிதமான ஃபோட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிடுவார். அதே போல் இன்ஸ்டாவில் செம்ம ஆக்டிவாகவும் வலம் வருகிறார்.

சமீபத்தின் இன்ஸ்டா ட்ரெண்டான “ரா ரா ரங்கம்மா” பாடலுக்கு நடனம் ஆடி இன்ஸ்டா ரீல்ஸை மீனா வெளியிட்டுள்ளார். குத்தாட்டம் போட்ட அவரின் வீடியோ லைக்ஸ்களை அள்ளியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement