• Sep 17 2024

மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கெட்ரி திரைப்படத்தின் திரை விமர்சனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மாதவன். தன்னுடைய நடிப்பினால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் சாக்லட் பாய் எனவும் செல்லமாக அழைக்கப்படுகின்றார். பல வருட காலமாக நடிகராக இருந்து வந்த மாதவன் தற்போது இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கின்றார்.

அதாவது இவரின் இயக்கத்தில் தற்போது 'ராக்கெட்ரி' என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக இவரே நடித்திருப்பதோடு, இவரோடு இணைந்து நடிகை சிம்ரனும் நடித்துள்ளார். இப்படத்தில் மாதவன் ஏற்றுள்ள கதாபாத்திரம் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட நம்பி நாராயணன் என்கிற விஞ்ஞானியின் உண்மைக் கதை பற்றியதாகும்.

மேலும் இந்தப் படத்தில் அப்துல் கலாம் உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றன. அதாவது ராக்கெட் தொழில்நுட்பத்தில், ஏவுகணை உற்பத்தியில் புதிய புதிய சாதனைகள் பல புரிந்ததில் கலாமிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு,

இந்த நிலையில் மிக மிக குறைந்த செலவில் liquid Fuel கொண்டு இயங்க கூடிய எஞ்சினை தயாரிக்க வேண்டும் என்பது நம்பி நாராயணனின்(மாதவன்) கனவாக இருக்கின்றது. இவருக்கு நாசாவில் மிகப்பெரிய சம்பளத்தில் வேலை கிடைக்கின்றது. ஆனால் இவர் இந்தியாவுக்காக தன்னுடைய உழைப்பை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்ரோவில் வேலைக்கு செல்கிறார்.

மிகக் குறைந்த விலையில் எஞ்சினை உருவாக்க குழு ஒன்றை அழைத்துக் கொண்டு அங்கு இருக்கும் விஞ்ஞானிகளுக்கே தெரியாமல் அவர்களின் யுக்தியை தெரிந்து கொண்டு வெறும் 60லட்சம் ரூபாய் செலவில் எஞ்சின் ஒன்றினை வெற்றிகரமாகத் தயாரிக்கிறார். இஸ்ரோவின் இயக்குநராக வர வேண்டிய நம்பி நாராயணன் விண்வெளி திட்ட ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டதாக குற்றச்சாட்டு ஒன்று அவர் மீது எழுந்தது. இந்த வழக்கின் காரணமாக கேரள போலீஸார் நம்பி நாராயணனைக் கைது செய்தனர். இந்த விசாரணை சிறைவாசம் என மாறி நான்கு ஆண்டுகளைக் கடந்தது. பின்னர் இவர் நிரபராதி என உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்படுகின்றார்.

எனினும் இவரது வேலையும் பறி போய் இவரது குடும்பத்தாரும் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கேட்டு நம்பி நாராயணன் மனித உரிமை ஆணையத்தில் வழக்குத் தொடுத்து அதன்மூலமாக ரூபா 1 கோடியே 30 லட்சம் தொகையினை இழப்பீடாகப் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் மீண்டும் இஸ்ரோவில் பணியமர்த்தப்பட்ட நம்பி நாராயணனால் முன்னரைப் போன்று வேகமாக செயல்பட முடியவில்லை. அதாவது அவர் மீது எழுந்திருந்த தவறான புகார், சிறைவாசம் என்பன அவர் பணிகளில் வேகமாக செயல்பட முடியாமல் அவரை முடக்கியது. எனவே இவர் பணியில் இணைந்து 3 ஆண்டுகளில் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் நம்பி நாராயணனுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைத்தெறியும் வகையில் இந்திய அரசு பத்ம பூஷன் பட்டத்தை இவருக்கு வழங்கி கௌரவிக்கின்றது. இது தனது நேர்மையான பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுவதாக நம்பி நாராயணன் அந்த இடத்தில் கூறுகின்றார்.

இந்தவகையில் நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானியின் வாழ்க்கை துயரத்தை மையமாகக் கொண்டமைந்ததே இந்த ராக்கெட்ரி படம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement