• Sep 17 2024

நயன்தாரா திருமணத்தில் நடந்த பிரச்சினை போலவே பிரபல நடிகையின் திருமணத்தில் ஏற்பட்ட சிக்கல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்ததால் இந்த ஆண்டு முழுவதும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகைகளான ஆலியா பட், மெளனி ராய், நிக்கி கல்ராணி, நயன்தாரா ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இவர்களைப் போல பிரபல பாலிவூட் நடிகையான அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோவும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2005ம் ஆண்டு வெளியான தி ஸ்குவின் அண்ட் தி வேல் படத்தின் மூலம் அறிமுகமானவர் அலெக்ஸாண்ட்ரா .

இப்படத்தைத் தொடர்ந்து ஜானஸ் பிரதர்ஸ், பெர்சி ஜாக்சன், தி ஹவுஸ், நைட் ஹன்டர், சூப்பர்மேன் மேன் ஆஃப் டுமாரோ, டை இன் தி கன்ஃபைட் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகரும் தயாரிப்பாளருமான ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

WWE சாம்பியனான ஆண்ட்ரூ பல வருடங்களாக ஹாலிவுட்டில் அதிகம் சம்பாதிக்கும் முன்னணி ஹீரோவாக மாறி உள்ளார். ஒரு படத்துக்கு 500 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் இவர் நடிப்பில் வெளியான பே வாட்ச், சான் ஆண்ட்ரியாஸ், ராம்பேஜ் உள்ளிட்ட பல படங்களில் அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ கவர்ச்சி பொங்க நடித்து ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார்.

உலகளவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். Vogue என்ற இதழில் அதிகாரப்பூர்வமாக இவரது திருமண புகைப்படம் வெளியாகி உள்ளது. டாப் ஹீரோயின்கள் எல்லாம் தங்களின் திருமணத்தையும் வியாபாரம் ஆக்கி வரும் நிலையில், பல மில்லியன் டாலர் இந்த அட்டைப் படத்திற்கே கிடைத்துள்ளதாம்.

மணப்பெண் கோலத்தில் வெள்ளை நிற கவுனில் இளவரசி போல அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். நடிகரும் தயாரிப்பாளருமான ஆண்ட்ரூ ஃபார்முக்கும் ஹாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

நடிகை நயன்தாராவின் திருமண லொகேஷன் திருப்பதியில் இருந்து மகாபலிபுரத்துக்கு மாறியதை போலவே, அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோவின் திருமண இடமும் கடைசி நேரத்தில் மாறியது குறிப்பிடத்தக்கது. அதாவது இத்தாலியில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த நிலையில், அடுத்ததாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புக்காக நியூ ஆர்லியன்ஸ் நகரிலேயே திருமணத்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement