• May 06 2024

பள்ளிக்கால ஐஸ்வர்யா ராஜேஷா இது.. என்ன இப்படி இருக்காங்களே... ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தொடர்ந்து தன்னுடைய கேரக்டருக்கும் கதைக்களங்களுக்கும் முக்கியத்தும் உள்ள படங்களை தேர்ந்தெடுத்துத்தான் நடித்து வருகிறார். 


அதாவது தன்னுடைய கேரக்டரின் தொடக்கத்திலிருந்தே சிறிய கேரக்டராக இருந்தாலும் தன்னுடைய கேரக்டருக்கு அதில் அதிக முக்கியத்துவம் இருந்தால் உடனே ஓகே சொல்லி நடித்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய கேரியரின் ஆரம்ப காலகட்டத்திலேயே 'காக்கா முட்டை' என்ற படத்தில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக ஏழைப் பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். 


இந்தப் படத்தினைத் தொடர்ந்து சில படங்களில் இவர் நகரத்து பெண்ணாக நடித்தாலும் அந்தப் படங்கள் ரசிகர்களை பெரிதளவில் கவரவில்லை. இருப்பினும் தற்போது கோலிவுட்டில் அதிகமான படங்களில் நடித்துவரும் நடிகை என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. மேலும் படங்களில் மட்டுமில்லாமல் வெப் தொடர்களிலும் தற்போது நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.


இந்நிலையில் இவர் தனது பள்ளிக் காலப் புகைப்படம் ஒன்றினைத் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்து அதில், நான் எந்த வகுப்பில் படிக்கும் பொது எடுத்த புகைப்படம் இது எனக் கண்டுபிடியுங்கள் எனக் கூறி வருகின்றார். அப்புகைப்படத்தில் அவர் ரொம்பவே மெலிதாக இருப்பதால் பலரும்  ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்தில் என்ன இப்படி இருக்கீங்க எனக் கேட்டு வருகின்றனர். 

இதோ அந்தப் புகைப்படம்..! 


Advertisement

Advertisement

Advertisement