விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பரபரப்பாக ஒளிபரப்பப்படும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்2. இந்த சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
அதில், மயிலின்ர அம்மாவும் அப்பாவும் கோமதி வீட்ட போய் நிற்கிறார்கள். கோமதி அவர்களைப் பார்த்தவுடனே வெளியில போங்க என்று கோபமாகச் சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியம் அப்படி எல்லாம் எங்களால போக முடியாது என்கிறார்.

அதைத் தொடர்ந்து பாக்கியம் கோமதியைப் பார்த்து உங்க மகன் எவளோ ஒருத்தியை கூட்டிகொண்டு ஊரையே சுத்திக்கிட்டுத் திரியுறான் என்று சொல்லுறார். அந்த நேரம் பார்த்து சரவணன் அங்க வந்தவுடனே மயிலோட அப்பா அவர் கிட்ட என்ர பொண்ணை விட்டிட்டு இன்னொருத்தி கூட திரியுறீங்களா என்று கேட்கிறார்.
அதைக் கேட்ட சரவணன் கோபப்படுறார். பின் மயில் அங்க போய் அம்மாவையும் அப்பாவையும் அங்கிருந்து கூட்டிக் கொண்டு வெளியில போறார். வீட்டுக்கு வந்த மயில் பாக்கியத்தைப் பார்த்து எதுக்கு அம்மா மேலும் மேலும் சாபத்தை வாங்கிக் கொடுக்கிற என்று சொல்லுறார்.
மேலும், நான் வேலைக்குப் போய் சம்பாதிச்சு இந்த வீட்டை காப்பாத்துறேன் என்கிறார் மயில். இதுதான் இனி நிகழவிருப்பது...
Listen News!