விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இளைஞர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியல் குறுகிய காலத்திலேயே விஜய் டிவி டிஆர்பியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த கதைக்களம் பற்றி புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளியாகும் ப்ரோமோக்களை பார்ப்பதற்காக பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அதன்படி தற்போது வெளியான ப்ரோமோவில், முத்துவும் மீனாவும் தமக்கு கிடைத்த புதிய வேனை கோவிலில் வைத்து பூஜை செய்து தங்களுடைய தொழிலை ஆரம்பிக்கின்றனர். பூஜைக்காக அவர்களுடைய குடும்பத்தாரும் கலந்து கொள்கின்றனர்.
இதன்போது சீதா கோவிலுக்கு வரும் போது, ஏற்கனவே விஜயாவுக்கு பொய் ஜோசியம் சொன்ன சிந்தாமணியின் அடியாள், சீதாவின் தாலியை அறுத்துவிட்டு செல்கிறார்.

இதன் போது சீதா நடந்தவற்றை மீனாவிடம் சொல்ல, மீனா ஓடிச்சென்று அவரைப் பிடித்து விடுகின்றார். மேலும் அவர் விஜயாவுக்கு ஜோசியம் சொன்னவர் என்று தெரிய வருகின்றது. ஆனாலும் அவர் தப்பித்து விடுகின்றார்.
மேலும் இவற்றை விஜயாவிடம் சொல்ல, விஜயா நம்ப மறுக்கின்றார். எனினும் மீனா அவ பிராடு, சீதாவின் தாலி செயினை அறுத்துவிட்டு சென்றுள்ளார் என்று சொல்ல, விஜயா நம்ப மறுக்கின்றார் .
இதனால் அவர் பிராடு என்று நாங்கள் நிரூபித்தால் என்ன பண்ணுவீங்க என்று விஜயாவுக்கு செக் வைக்கின்றார் முத்து. அதன் பின்பு முத்துவும் மீனாவும் சென்று சிசிடி கேமராவில் அவரை பார்க்கின்றனர். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
எனவே இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. இதன் அடிப்படையில் மீனாவுக்கு பொய் ஜோசியம் சொன்னது நிரூபணம் ஆகிவிடும். அதற்குப் பிறகு மீனா விஜயா வீட்டுக்கு வந்து விடுவார் என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!