• Jun 04 2023

ஒரே நடிகையை உருகி உருகி காதலித்த சரத்குமார், அஜித்குமார்.. கடைசியில் நடந்தது என்ன..?

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  மாஸ் நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார். எனினும் தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். 

இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் என்று கூறப்படுகின்றது.

இவ்வாறுஇருக்கையில் அஜித்தின் வாழ்வில் நடந்த காதல் சம்பவம் பற்றி ஒரு தகவல் தற்போது தீயாய் பரவி வருகின்றது.


அதாவது  ஷாலினிக்கு முன் நடிகை ஹீராவை துரத்தி துரத்தி காதலித்துள்ளார். ஆம், அவருக்காக இரவெல்லாம் கண்விழுது காதல் கடிதம் எல்லாம் எழுதியுள்ளார் அஜித். ஆனால், நடிகை ஹீரா அஜித்துக்கு ரெட் சிக்னல் காட்டி விட்டார். 

அஜித்தின் இந்த காதல் ஒரு தலை ராகமாகவே முடிந்துவிட்டது. அஜித் மற்றும் ஹீரா இணைந்து இரு திரைப்படங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அத்தோடு அஜித்தை போலவே நடிகை ஹீராவை நடிகர் சரத்குமாரும் காதலித்துள்ளார்.மேலும்  இவர்கள் இருவரும் சில வருடங்கள் ஒன்றாக காதலித்துள்ளார்கள். இதன்பின் ஹீரோவை பெண் கேட்டு அவருடைய வீட்டிற்கு சரத்குமார் சென்றுள்ளார். ஆனால், அதன்பின் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அங்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை.


Advertisement

Advertisement

Advertisement