• Sep 22 2023

டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய சந்தானம்- இத்தனை கோடியா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் மூலம் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்து தற்போது வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நடிகராக விளங்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் கடந்த 2016 ம் ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இப்பொழுது இப்படத்தின் மூன்றாம் பாகம் டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தில் காமெடி கலக்கலாக இருப்பதால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் இப்படம் வெளியாகி நான்கு நாட்களை கடந்த நிலையில் தற்போது மொத்த வசூல் விவரம் குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இதுவரை 15 கோடி வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.

 மேலும் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் மிகப் பெரும் வசூலை கொடுத்த படமாக டிடி ரிட்டர்ன்ஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் ஹீரோவாக நடிக்க ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கி வந்த சந்தானம், டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரூபாய் 8 கோடி சம்பளம் உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement