• May 05 2024

செம மாஸாக மீண்டும் ஹைதராபாத்திற்கு திரும்பிய சமந்தா-ட்ரெண்டாகும் வீடியோ

stella / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தாவுக்கு கடந்தாண்டு மிகவும் சோகமான மற்றும் கஷ்டங்கள் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது. ஏனெனில், கடந்தாண்டு இவருக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 6 மாதங்கள் படாத பாடுபட்ட சமந்தா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்த பின்னரே அதில் இருந்து படிப்படியாக மீண்டார்.

 மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்ட பின்னர் சினிமாவில் மீண்டும் பிசியாகிவிட்டார் சமந்தா. அவர் நடிப்பில் தற்போது குஷி என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. 


இதையடுத்து நடிகை சமந்தா நடிப்பில் சிட்டாடெல் என்கிற வெப் தொடரும் தயாராகி வருகிறது. இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கி வருகின்றனர். இந்த வெப் தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் .  சிட்டாடெல் வெப் தொடரில் நடித்து முடித்த பின்னர் நடிகை சமந்தா சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாராம்எ என்றுமு் கூறப்படுகின்றது.

இப்படியான நிலையில் சமந்தா தனது வீட்டிற்குச் செல்வதற்காக ஹைதராபாத்திற்கு வந்துள்ளார்.இது குறித்த வீடியோ தற்பொழுது வௌியாகி வைரலாகி வருவதைக் காணலாம். 



Advertisement

Advertisement

Advertisement