• May 05 2026

ரீல்ஸ் பார்ப்பதால் இப்படி ஒரு சிக்கல் இருக்கா.? தெரியாமல் போச்சே.! உண்மையை உடைத்த சமந்தா

shali / 2 months ago

Advertisement

Listen News!

திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா சமீபத்தில் பகிர்ந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, ரீல்ஸ் பார்ப்பதால் ஏற்படும் பயம் குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது சமந்தா, “நான் ஸ்கூல் படிக்கும் காலத்தில் டைம் டேபிள் போட்டு அதன்படி படிப்பேன். எதிலும் கவனச்சிதறல் ஏற்படாது. தற்போது அப்படி இருக்க முடியுமா என தெரியவில்லை. ரீல்ஸ் பார்ப்பதால் வரும் FOMO பயம் மோசமானது. அதனால் நான் என் இன்ஸ்டாகிராமை லாக் செய்துவிடுவேன். வேண்டுமென்றே போரிங்கான மற்ற விஷயங்களை செய்வேன். என்னை பற்றி நெகட்டிவ்வாக பேசுபவர்களை நான் உடனே பிளாக் செய்தும் விடுவேன்,” என்று கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் பிரபலங்களை குறிவைத்து வரும் விமர்சனங்கள், கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளியாகிய வண்ணமே இருக்கின்றன. இந்நிலையில், சமந்தா கூறிய கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

சமந்தாவின் இந்த திறந்த மனப்பாங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பெரும்பாலும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பளிச்சென்று காணப்படுவார்கள். ஆனால் அந்த பளபளப்பின் பின்னால் மனஅழுத்தங்களும் சவால்களும் இருப்பதை சமந்தாவின் கருத்து நினைவூட்டுகிறது. 

Advertisement

Advertisement