• Mar 27 2023

குடியரசு தினத்திற்காக அதிரடி காட்டிய சாக்ஷி அகர்வால்..தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 months ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால்.இவர் தற்போது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை படத்தில் நடித்துள்ளார்.


தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். 


எனினும் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். எனினும் தற்போது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இந்திய நாட்டின் 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. இவ்வாறுஇருக்கையில் குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையில் சாக்ஷி அகர்வால் மூவர்ணத்திலான ஆடையை அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 


குடியரசு தினத்திற்காக அதிரடி காட்டிய சாக்ஷி அகர்வாலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement