• May 09 2024

தனுஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த ரூசோ சகோதரர்கள் -எப்படி சொல்லியிருக்காங்க பாருங்க!

stella / 1 year ago

Advertisement

Listen News!

துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் தனுஷ் . இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பின் எல்லைகளை விரிவுப்படுத்தியுள்ளார் .

இவரது நடிப்பில் சமீபத்தில் தி க்ரே மேன் படம் நெட்பிளிக்சில் வெளியானது. இப்படத்தில் அவரது கேரக்டர் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், தனுஷின் நடிப்பு தங்களை மட்டுமில்லாமல் படக்குழுவினர் அனைவரையும் கவர்ந்துள்ளதாகவும் தங்களது அடுத்த படத்திலும் அவர் இணைவார் என்றும் அவர்கள் படத்தின் பிரமோஷனின்போது தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் தனுஷ் தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தார். இதையொட்டி அவரது நானே வருவேன் மற்றும் வாத்தி படங்களின் போஸ்டர்கள் மற்றும் வாத்தி படத்தின் டீசர் ஆகியவை வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தனுஷின் பிறந்தநாளையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் சமூக வலைதளங்கள்மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.இதனால் தி க்ரே மேன் படத்தின் இயக்குநர்களான ரூசோ சகோதரர்களும் தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement