• Aug 25 2025

மீளாத வேதனையில் கிரிஷ்.. மனோஜின் முடிவால் அதிர்ச்சியில் உறைந்த ரோகிணி..! டுடே எபிசொட்.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, கிரிஷோட friends எல்லாரும் தங்கட அம்மா விளையாடுறதுக்கு பொருட்கள் வாங்கி கொடுத்தாங்க என்று கிரிஷ் கிட்ட காட்டுறார்கள். மேலும் அவர்கள் எல்லாரும் கிரிஷை பார்த்து உங்க வீட்ட இருந்து யாருமே வரேலையா என்று கேட்கிறார்கள். அதைக் கேட்ட கிரிஷ் ரொம்பவே கவலைப்படுறார். இதனை அடுத்து கிரிஷ் தன்ர அம்மாவோட பேசணும் என்று சொல்லி சார் கிட்ட போன் தரச்சொல்லி வாங்கிக் கதைக்கிறார். 



இதனை அடுத்து கிரிஷ் ரோகிணிக்கு போன் எடுத்து அழுது கதைக்கிறார். மேலும் எனக்கு யாருமே இல்ல என்று சொல்லி இங்க எல்லாரும் கிண்டல் பண்ணுறாங்க நீ இப்ப வா என்று சொல்லுறார் கிரிஷ். அதுக்கு ரோகிணி நீ இப்புடி எல்லாம் செய்தால் நானும் பாட்டி மாதிரி காணாமல் போயிடுவேன் என்கிறார். பின் மீனா கிரிஷோட ஸ்கூலுக்கு டெகரேஷன் பண்ண வந்திருக்கேன் என்று சொல்லுறார். அதே ஓடரை செய்ய சிந்தாமணியும் வந்து நிக்கிறார்.

அதைப் பார்த்த மீனா சிந்தாமணியை பழி வாங்கணும் என்று நினைத்து பட்ஜெட்டை கம்மியா சொல்லுறார். பின் சிந்தாமணி மீனா சொன்ன பட்ஜெட்டை விட கம்மியாவே நான் பண்ணுறேன் என்கிறார். இதனை அடுத்து  கிரிஷ் மீனாவைப் பார்த்தவுடனே அவங்களை கூப்பிட்டுக் கொண்டு ஓடுறார். ஆனா மீனா அதைப் பார்க்காமல் அங்கிருந்து  கிளம்புறார்.



இதனைத் தொடர்ந்து மனோஜ் மேடையில பேசுறதுக்கு ரியர்சல் பார்க்கிறார். அதைப் பார்த்த ரோகிணி கொஞ்சம் தமிழும் கலந்து பேசு என்கிறார். பின் ரோகிணி மனோஜைப் பார்த்து எந்த ஸ்கூலுக்கு போக போற என்று கேட்கிறார். இதனை அடுத்து மனோஜ் கிரிஷோட ஸ்கூலுக்கு தான் போகப்போறேன் என்று சொன்னதைக் கேட்டவுடனே ரோகிணி ஷாக் ஆகுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement