• Sep 27 2023

மீனா,மனோஜிற்குப் பார்த்த பொண்ணு தான் என அறிந்த ரோகினி- மனோஜை அடித்து உதைத்த முத்து-Siragadikka Aasai Promo

stella / 1 month ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் நம்பர் சீரியலாக கருதப்படுவது தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்து ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மனோஜ், ரோகினி,மீனா,முத்து எல்லோரும் ஒரு ஹொட்டலில் சாப்பிடப் போகின்றனர். அப்போது ரோகினி உங்க ரெண்டு பேருக்கும் எப்பிடி திருமணம் ஆச்சு என்று கேட்கின்றார்.அதற்கு முத்து மீனா மனோஜிற்கு பார்த்த பொண்ணு மனோஜ் கல்யாண மண்டபத்தில இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியதால் மீனாவை நான் கல்யாணம் பண்ணிக் கிட்டேன் என்று சொல்கின்றார்.


அப்போது ரோகினி அப்போ இது உங்கட கல்யாணம் பரிதாபக் கல்யாணமா என்று கேட்கின்றார்.அப்போது மனோஜ் எல்லாம் எங்க அப்பாவால தான் அப்பா பஞ்சமாக்கா என்று சொல்ல, முத்து அப்பாவைப் பற்றியா தப்பா சொல்லுகின்றாய் என்று மனோஜை அடிப்பதோடு அவரின் கைவிரலை முறித்து விடுகின்றார்.

பின்னர் வெளியே வந்து நான் செய்தது சரி தானே என்று சொல்ல மீனா அடிச்சது சரி ஆனால் பரிதாபக் கல்யாணமா என்று கேட்ட போதே அடிச்சிருக்கோனும் என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement