தமிழ் சினிமாவில் நடிகையாய் மட்டுமல்லாது, சமூகத்துக்காக தன்னந்தனியாக குரல் கொடுப்பவராகவும் அமைந்துள்ளவர் நடிகை ரேகா நாயர். சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், ஆண்களால் ஏற்படும் தவறான நடத்தை, பெண்களின் ஆடைத் தேர்வுகள் இவை தொடர்பாக எப்போதும் நேர்மையாக பேசக்கூடிய நபராக இவர் விளங்குகிறார்.
சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில், தனது ஆடைகள், பெண்களின் உரிமை மற்றும் சமூகத்தில் ஆண்களின் தவறான பார்வை குறித்து அவர் மிகுந்த தீவிரத்தோடும், உண்மையான நம்பிக்கையோடும் கருத்துகளை பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வெறித்தனமாக வைரலாகி வருகிறது.
பேட்டியின் போது, ரேகா நாயர், "ஒரு ஆண் இருக்க கூடிய பேருந்தில் நான் ஏறினால் அப்போ என்ர இடுப்பு தெரிந்தாலும், தெரியாமல் இருந்தாலும் ஒரு ஆண் கை வைத்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனா அதை சந்தோசமாக ஏற்றுக் கொள்ளனும்னு நான் சொல்லேல.
உன்னால இடுப்பக் கட்டுற மாதிரி dress போட முடியும் என்றால், தப்பு பண்ணுறவனை அடிச்சு தூக்கி போடுற அளவுக்கு தைரியம் இருக்கணும். அப்புடி இருந்தால் தான் அந்த மாதிரி ஆடைகளை அணியுங்க. நீங்கள் ஆடைகளையும் தப்பா அணிவீங்க, ஆண்களையும் தப்பா சொல்லுவீங்க என்றால் என்ன அர்த்தம்." எனக் கூறியுள்ளார்.
இந்த கருத்துகள், ஆடையை தப்பாக அணிவதற்காக பெண்களையே குற்றம் சொல்லும் சமூகத்தையும், அதில் தவறு செய்யும் ஆண்களையும், ஒரே நேரத்தில் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருக்கின்றன.
இந்த பேட்டியின் வீடியோ வைரலான பிறகு, பலரும் ரேகாவின் நேர்மை மற்றும் தைரியம் குறித்து பாராட்டி வருகின்றனர்.
Listen News!