• May 05 2024

சுவரில் ஒட்டியிருக்கும் பல்லி போன்று தான் ரன்வீர் சிங்- நிர்வாண போட்டோவை வைத்து நெட்டிசன்கள் செய்யும் அட்ராசிட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட்டில் இளம் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருபவர் ரன்வீர் சிங். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் பிரபல பாலிவூட் நடிகையான தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

மாடலிங் துறையிலும் ஆர்வம் உள்ள இவர் லேட்டஸ்டான போட்டோஷுட்களை நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.பொதுவாகவே பிரபல பத்திரிகைகளுக்காக நடிகைகள் மட்டுமே ஆபாசமாகவும் நிர்வாணமாகவும் போட்டோ ஷூட் கொடுப்பது வழக்கம். நடிகர்களில் அரிதாக Burt Reynolds போன்று யாரேனும் சில நேரங்களில் நடிகைகளுக்கு டஃப் கொடுப்பார்கள்.

அந்த வகையில் தற்பொழுது ரன்வீர் சிங்கும் நிர்வாணமாக போட்டோ நடத்தி வெளியிட்டுள்ளார்.இவரின் நிர்வாண புகைப்படங்களை ரசிகைகளும் கொண்டாடி வந்தாலும் இந்த போட்டோ ஷூட் குறித்து பல விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இவை எதையும் கண்கொள்ளாத ரன்வீர், "தன்னால் ஆயிரம் பேர் முன்னிலையில் கூட நிர்வாணமாக இருக்க முடியும்" எனக் கூறி விமர்சகர்களையே திண்டாட வைத்துவிட்டார்.

மிகவும் புகழ்பெற்ற ஆதாமின் நிர்வாண ஓவியத்தோடு ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோவை ஒப்பிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், "இது ரன்வீர் கிரியேஷன்' என ட்ரோல் செய்துள்ளார்.

சுவரில் ஒட்டியிருக்கும் பல்லி போன்றும், ஆதிமனிதன் என இன்னும் விதவிதமாக ரன்வீரின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தை ரவுண்டு கட்டி வருகின்றன. நெட்டிசன்களே போதும் விட்டுவிடலாம் என்ற வகையில் ரன்வீர் சிங் ட்ரோல் செய்யப்படுவது, பலரையும் கவனிக்க வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement