• May 19 2024

முதல் நாளிலேயே ஹன்சிகாவின் மஹா இவ்வளவு தான் வசூலா? வெளியானது முழு விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இது தவிர தெலுங்கு சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

மாப்பிள்ளை திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீய வேலை செய்யணும் குமாரு, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, வேட்டை மன்னன், ரோமியோ ஜுலியட் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவ்வாறுஇருக்கையில் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் நேற்றுவெளியான திரைப்படம் மஹா.

இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.மேலும் ஹன்சிகாவின் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மஹா திரைப்படம் வெளியாகியுள்ளதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் நாளிலேயே படம் வசூலில் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.அதாவது முதல் நாளில் மொத்தமாக ரூ. 1 கோடியை கூட படம் வசூலிக்கவில்லை என கூறப்படுகின்றது.

மேலும் இந்த வசூல் விவரம் படக்குழுவிற்கே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement