தமிழ் சினிமா உலகில் சமூக, அரசியல் கருத்துக்களை மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கி வித்தியாசமான கதைகளால் ரசிகர்களை ஈர்க்கும் இயக்குநர் மோகன் ஜி, தற்போது பேட்டியில் தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் இயக்கும் ‘திரெளபதி 2’ படத்தின் முன்னோட்டங்களும், படத்திற்கு ஏற்பட்ட சவால்களும் குறித்து, மோகன் ஜி வெளிப்படையாக பேட்டியிட்டார்.

ஒரு தனியார் ஊடகத்திற்கான பேட்டியில் இயக்குநர் மோகன் ஜி, “என்னை விட இயக்குநர் ரஞ்சித்துக்கு நிறைய வாய்ப்பு வருதுன்னு சொல்லுறாங்க. ஆனா, எனக்கு கிடைக்க கூடிய பல வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது இல்ல.” என்று சொன்னார்.
அவர் மேலும், “நான் கோவிலுக்கு போனா என்ன கைபுடிச்சு VIP வரிசைல அழைச்சிட்டு போவாங்க. தென் தமிழ் நாட்டுக்கு நான் போனா அங்க இருக்கிற மக்கள் என்ன அவங்க வீட்டில ஒக்கார வைச்சு ஒரு புள்ள மாதிரி என்ன சாப்பிட வைப்பாங்க. இதெல்லாம் ரஞ்சித்துக்கு கிடைக்குமான்னு எனக்குத் தெரியல.”என்று கூறியிருந்தார்.
இயக்குநர் மோகன் ஜி கூறிய கருத்துகள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பல ரசிகர்கள் மோகன் ஜியின் நேர்மையான பதிலை பாராட்டியுள்ளனர், அதே சமயம் சிலர் விமர்சனங்களும் தெரிவித்துள்ளனர்.
Listen News!