தமிழ் சினிமாவிலும், தனது தனித்துவமான கேட்டரிங் துறையிலும் சிறப்பான இடத்தைப் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். இதனால் சினிமாவிலும் வணிகத்திலும் ஒரே நேரத்தில் வெற்றி கண்டவராக மாதம்பட்டி ரங்கராஜ் திகழ்ந்து வருகிறார்.
கோயம்புத்தூரை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் 'மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி' என்ற கேட்டரிங் சேவையின் மூலம் பிரபலமானார். குறிப்பாக திருமணங்கள், பெரிய விழாக்கள் போன்றவற்றில் இவரது உணவு ஏற்பாடுகள் மிகவும் பிரபலமானவை. "மாதம்பட்டி ஸ்டைல்" சாப்பாடு என்று தனிப் பெயரே பெற்றுள்ளது.
இதற்குப் பின்னர் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார். மேஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பரவலான அங்கீகாரம் பெற்றார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவரை திருமணம் செய்தார் ரங்கராஜ். ஏற்கனவே ரங்கராஜிக்கு திருமணமாகி பிள்ளைகள் இருக்கும் நிலையில் இவரை இரண்டாவதாக திருமணம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன்பின்பு, தன்னை திருமணம் செய்வதாக சொல்லி ரங்கராஜ் ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா புகார் கொடுத்தார். மேலும் தன்னுடைய குழந்தைக்கு நீதியும் கேட்டார். இறுதியில் டிஎன்ஏ பரிசோதனையில் ரங்கராஜ்தான் அந்தக் குழந்தையின் தந்தை என உறுதியானது.
இந்த நிலையில், பல சர்ச்சைகளுக்குப் பின்னர் ரங்கராஜ் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குக் வித் கோமாளி பற்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக செஃப் தாமு பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார்.
அதில், "செஃப் தாமுவுடன் வேலை செய்வது தனது பெற்றோருக்கு பெருமை என்றும், தான் சிறு வயதில் இருந்தபோது அவருடைய நிகழ்ச்சிகளை தனது பெற்றோர் ரசித்துப் பார்த்தார்கள் என்றும், தற்போது தான் அவருடன் பணியாற்றுவதை அவர்கள் பெருமையாகப் பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் பறவை முனியம்மாவும் செஃப் தாமுவும் இணைந்து ஒரு நிகழ்ச்சி நடத்துவார்கள், அதை தனது பெற்றோர் தவறாமல் மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.
Listen News!