• Apr 28 2026

பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜெய்க்கு புதிய போஸ்ட்டரை வெளியிட்ட ' சட்டென்று மாறுது வானிலை' படக்குழு

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெய் இன்று (ஏப்ரல் 06) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், சட்டென்று மாறுது வானிலை படக்குழுவும் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.


இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்திருக்கிறார். மேலும், நகைச்சுவை மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் யோகி பாபு இடம்பெற்றுள்ளார். இப்படத்தை இயக்குநர் பாபு விஜய் இயக்கியுள்ளார்.

பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த புதிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜெய் ரசிகர்கள் இந்த போஸ்டரை பகிர்ந்து அவருக்கு தங்களது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இப்படம் குறித்து ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், இந்த போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement