• Jul 19 2025

இப்டி ஒரு பையன் கிடைச்சது தான் பெருமை.. பன் பட்டர் ஜாம் படத்தால் நெகிழ்ந்த ராஜுவின் அம்மா!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்பொழுது ரியல் ஸ்டாராக உருவாகி வரும் பிரபலங்களில் முக்கியமானவர் ராஜு. சின்னத்திரை, நிகழ்ச்சி தொகுப்பு, நகைச்சுவை என பல்வேறு அனுபவங்களைப் பூர்த்தி செய்து, வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள அவர் நடித்த முதல் திரைப்படம் 'பன் பட்டர் ஜாம்' நேற்று (ஜூலை 18) திரையிடப்பட்டது.


இந்த படத்தின் முதல் நாள் ரிவ்யூ, வசூல், ரசிகர்கள் எதிர்வினை அனைத்தும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது ராஜுவின் அம்மா வெளியிட்ட ஒரு நெகிழ்ச்சியான வீடியோ பதிவு மற்றும் கருத்து தான் இணையத்தில் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் அளவிற்கு வைரலாகியுள்ளது.

நகைச்சுவை கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம், இயக்குநர் ராகவ் மிர்தத் அவர்களால் இயக்கப்பட்டுள்ளது. ராஜு, ஒரு சாதாரண இளைஞனாக, வாழ்க்கையை சிரிப்புடனும், உணர்வுடனும் எதிர்கொள்வது போன்ற கதையில் நடித்து உள்ளார்.


இதனைப் பார்த்த ராஜுவின் அம்மா,"பன் பட்டர் ஜாம் படம் ரொம்ப நல்லா இருந்துச்சு. ராஜு ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது," என்று தன் மகனின் வெற்றியை பார்த்த மகிழ்ச்சியில் அழகாக பேசியிருந்தார்.

மேலும், “தம்பி இந்த நிலைமைக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்த எல்லாருக்கும் நன்றி சொல்றேன். எல்லாரும் படத்தை தியட்டரில வந்து பாருங்க. இப்படி ஒரு பையன் எனக்கு பிறந்தத நினைச்சு சந்தோஷப்படுகிறேன். இவன் வீட்டிலயும் படத்தில இருக்கற மாதிரியே தான், ரொம்ப ஜாலியா இருப்பான்.” என்றார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement