• May 08 2024

'தி லெஜெண்ட்' பட ஹீரோவின் மகளா இது..? இவ்வளவு அழகாக இருக்காங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'சரவணா ஸ்டோர்ஸ்' உரிமையாளரான சரவணன் அருள் பற்றி இன்று தெரியாதவர்களே இருக்க முடியாது. ஏனெனில் இவர் தனது கடைக்கான விளம்பரத்தில் தானே நடித்து பட்டிதொட்டியெங்கும் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆரம்பத்தில் இவர் விளம்பரத்தில் நடிப்பதை பலரும் கேலி, கிண்டல் செய்து சிரித்திருந்தனர். ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது 'தி லெஜண்ட்' என்ற பெயரில் உருவான தமிழ் திரைப்படத்திலும் சரவணன் அருள் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நாயகியாகவும், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.

சரவணன் அருள் நடிப்பில் உருவான இப்படமானது இரு தினங்களுக்கு முன் வெளியாகிய நிலையில் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக 'சூப்பர் ஹீரோ' என்ற படத்திலும் சரவணன் அருள் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது லெஜண்ட் சரவணன் அருளின் மகள் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சரவணன் அருளின் மகள் திருமணத்தில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள். எனினும் இவர்களது புகைப்படங்கள் வெளியாகாது சரவணன் அருளின் மகளுடைய புகைப்படமே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement