• Mar 25 2023

ரஜினிகாந்த்தின் அடுத்த படம் இதுவா..? யார் இயக்குகிறார் தெரியுமா..? லைக்கா வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த பெருமை ரஜினிகாந்த்தையே சாரும். இதனாலேயே இவரைப் பலரும் இன்றுவரை சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகின்றனர். அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இரு திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.


அதில் ஒன்று 'லால் சலாம்'. இப்படத்தின் உடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்து விட்டது. அத்தோடு படப்பிடிப்பு பணிகளும் ஆரம்பமாகி இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் லைக்கா வுடன் இணைந்துள்ள இரண்டாவது படத்தின் அறிவிப்பு இன்று காலை வெளிவரும் என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது.


இந்நிலையில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்தவகையில் லைக்கா தயாரிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் 'தலைவர் 170' என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைகாவுள்ளார் என்றும் இதன் மூலமாக அறிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement