• Apr 15 2026

மலேசியாவில் அஜித்தை நேரில் சந்தித்த பிரபல நடிகை… உற்சாகத்தில் ரசிகர்கள்.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார், சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட ஆர்வமான பைக் மற்றும் கார் ரேஸிங் துறையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி, ஒரு தொழில்முறை ரேஸிங் ஆர்வலராகவும் தன்னை நிரூபித்து வரும் அஜித், தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸிங் போட்டிகளில் தனது அணியுடன் பங்கேற்று வருகிறார்.


இந்த கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக, அஜித் ஒரு வாரத்திற்கு முன்பே மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் தனது அணியினருடன் பயிற்சிகள் மேற்கொண்டு, போட்டிகளுக்கான தயார்படுத்தலில் ஈடுபட்டு வருகிறார். அஜித்தின் இந்த பயணம், அவரது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா சென்ற அஜித், அங்குள்ள பிரபலமான முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் அவர் வழிபாடு மேற்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தின. 

கார் ரேஸ் போட்டிகளுக்கு இடையே, அஜித் சில விளம்பர படங்களில் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான படப்பிடிப்புகள் மலேசியாவில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், சினிமா, விளம்பரம், கார் ரேஸ் என பல்வேறு துறைகளிலும் ஒரே நேரத்தில் பிஸியாக செயல்பட்டு வருகிறார் அஜித்.


இந்த நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸ் போட்டி அரங்கிற்கு நேரில் சென்று நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement