• May 08 2024

பிரபல நடிகரின் படத்தை பார்த்து விட்டு கண்ணீர் விட்ட ரஜினிகாந்த் – எந்த படம் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இப்படத்தினை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருப்பதோடு ப்ரியங்கா மோகன், எஸ்.ஜே சூர்யா, ஷிவாங்கி என பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இருந்தே படத்தின் வசூலுக்கு குறையே இல்லை. 4 நாளிலேயே படம் ரூ. 50 கோடி வரை வசூலித்தது. தற்போது என்ன தகவல் என்றால் படம் 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 42 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் திரையரங்கில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை போனில் அழைத்து வாழ்த்தியுள்ளார். மேலும் இதன் க்ளைமேக்ஸை கண்டு தான் கண்ணீர் விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/y2PXJAR7FsI


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement