• Apr 16 2026

உங்களுக்கு எல்லாம் என் வாழ்க்கைதானா கிடைச்சது.? நான் ஒருத்திக்காக வாழ்கிறவன்.! ஆதி வீடியோ

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதாவின் கணவர் ஆதி மீது தற்போது ஸ்வேதா மட்டுமல்லாமல் தாமரைச் செல்வியும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். நடிகை ஸ்வேதா தன்னுடைய குடும்பத்தை எதிர்த்து ஆதி என்பவரை திருமணம் செய்தார்.

எனினும், நாளடைவில் அவர் தவறானவர் என புரிந்து கொண்டு அவரிடம் இருந்து விலகினார். அதற்கு பின் தாமரைச் செல்வி, “நான் அவரை தம்பி போல வீட்டில் வைத்து கவனித்துக் கொண்டேன். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டார். என்னுடைய மூன்று சவரன் நகையையும் கொடுத்து ஏமாந்துவிட்டேன்” என தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.

அதே நேரத்தில், நேற்றைய தினம் நடிகை ஸ்வேதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “ஆதி, நீ எனக்கு வேண்டாம். என்னை விட்டுடு. உன்னை நம்பி ஏமாந்தது போதும். யாரையும் ஏமாற்றாதே. உனக்காகத்தான் நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தேன். உனக்காகத்தான் உழைத்தேன். நான் உழைத்த அத்தனை காசும் உனக்காகத்தான் செலவழித்தேன்” என உருக்கமாக பேசி இருந்தார்.


இந்த நிலையில், ஆதி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், “ஆறு, ஏழு மாசமா நீ எங்க போய் இருந்த ஸ்வேதா..? நான் உனக்கு எவ்வளவு மெசேஜ், எவ்வளவு கால் பண்ணி இருப்பேன். உன் நண்பர் வீட்டுக்கு வந்தேன், உன் ஷூட்டிங்குக்கும் வந்தேன். ஆனால் நீ என்ன பண்ணினாய்? என் மேல தான் தப்பு இல்லை.

உனக்கும் எனக்கும் என்ன சண்டை, ஸ்வேதா? நீ வீட்டை விட்டு போனபோது நான் என்ன சொன்னேன்? உண்மையான காரணத்தை சொல்லு, நான் கையெழுத்து போட்டு தரேன் என்று சொன்னேன். ஆனால் நான் பண்ணாத தப்புக்கு எப்படி ஒத்துக் கொள்ள முடியும்?

என்னால ஒரு பெண் இறந்துவிட்டார் என்று அப்படி நீங்கள் ஜட்ஜ் பண்ண முடியுமா? அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என் முகத்தை வைத்து, என் கேரக்டரை வைத்து ஜட்ஜ் பண்ணுறீர்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும், அவருடைய கேப்ஷனில் “சோஷியல் மீடியா இல்லை, ஃபேக் மீடியா” என்று குறிப்பிட்டதோடு, கேரளா பஸ்ஸில் நடந்த இன்சிடென்ட் ஒரு உயிரை பலி எடுத்தது, அது சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டதால்தான் நடந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement