சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு பிரபல நடிகர் பாலையா ஆகிய இருவரும் ஒரே படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படம் தான் ’ஜெயிலர் 2’ என்று கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ’வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் அடுத்ததாக ’கூலி’ என்ற படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் ’கூலி’ படத்தை முடித்தவுடன் ’ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணியை நெல்சன் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
’ஜெயிலர்’ முதல் பாகத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நிலையில் ’ஜெயில்ல 2’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பாலையா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ’ஜெயிலர்’ முதல் பாகத்திலேயே பாலையா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் இந்த நிலையில் ’ஜெயிலர்’ இரண்டாம் பாகத்தில் நேரம் ஒதுக்கி தான் நடித்து தருவதாக நெல்சன் இடம் பாலையா உறுதிமொழி கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினி மற்றும் பாலையா தனித்தனியாக நடித்தாலே அந்த படங்கள் மாஸாக இருக்கும் நிலையில் இருவரும் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!