தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது, சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி உள்ளார். அதன்படி தமிழில் இவர் நடித்துள்ள முதல் படம் லெஜண்ட். மேலும் இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். மேலும் இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார்.
மேலும் இதுதவிர இப்படத்தில் ராய் லட்சுமி, ரோபோ ஷங்கர், பிரபு, விவேக், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை லெஜண்ட் சரவணன் தான் தயாரித்துள்ளார்.
லெஜண்ட் திரைப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.மேலும் இப்படத்துக்கான ரிலீஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி சமீபத்தில் துபாயில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.
அத்தோடு அதில் கலந்துகொண்ட லெஜண்ட் சரவணன், பத்திரிகையாளர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன்படி உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த லெஜண்ட் சரவணன், ரஜினி, விஜய் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும், குறிப்பாக சிறுவயதிலிருந்தே ரஜினியின் படங்களையும், அவரது ஸ்டைலையும் பார்த்து ரசித்தவன் நான்.
அவரைப் போல் ஸ்டைல் வந்துவிடக் கூடாது என நான் தவிர்க்க பார்ப்பேன், ஆனால் அதையும் மீறி ரஜினி ஸ்டைல் நடிப்பு எனக்குள் வந்துவிடுகிறது. அதேபோல் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே தனக்கு ஆசை இருந்ததாக தெரிவித்த சரவணன், அதற்கான சூழல் தற்போது அமைந்ததால் தான் நடிக்க வந்ததாக குறிப்பிட்டார்.
பிற செய்திகள்
- இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தளபதி விஜய்யா-வெளியானது தகவல்..!
- தளபதி படத்தில் அது இல்லாம இருக்குமா ? வாரிசு படம் பற்றி சீக்கிரட்டை உடைத்த தமன்
- நான் படம் நடிப்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது : தி லெஜெண்ட் சரவணன்
- பிராடு…12 கோடி தமிழர்களை ஏமாத்திருக்கீங்க – பார்த்திபனை மறுபடியும் வம்புக்கிளுத்த ப்ளூ சட்டை மாறன்
- நடிகர் ரஜினிகாந்த்துக்கும் விருது- குவியும் வாழ்த்துக்கள்…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!