• Jan 19 2025

கடனில் சிக்கிய கஸ்தூரி ராஜாவுக்கு உதவாத ரஜனி.? மகளின் விவாகரத்திற்கு இதுதான் காரணமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்த நிலையில் மீண்டும் இவர்கள் இணைய வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் அதற்கு கொஞ்சமும் வாய்ப்பில்லை என்ற வகையில் நீதிமன்றத்தால் இவர்களுடைய வழக்கிற்கு இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் இவர்கள்  இருவருக்கும் இடையிலான திருமண பந்தம் சட்டரீதியாக முடிவுக்கு வந்தது.

தனுஷும் ஐஸ்வர்யாவும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்களுடைய வாழ்க்கையில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அதன் பின்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதற்கு முடிவெடுத்தார்கள்.

இவர்களை சேர்த்து வைப்பதற்காக இரண்டு வீட்டார் மட்டும் இல்லாமல் ஏனைய பிரபலங்களும் முயற்சித்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்களுடைய முடிவில் உறுதியாக இருந்தனர். அதன்படி தற்போது சட்டரீதியாகவே விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளார்கள்.

d_i_a

இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க முயன்று அது நடக்கவில்லை. இருவருக்கும் கோர்ட் விவாகரத்து கொடுத்தது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.


அதிலும் முக்கியமாக கஸ்தூரிராஜாவுக்கு தேனியில் சொந்தமா ஒரு தியேட்டர் இருக்கு அதை கஸ்தூரிராஜா வட்டிக்கு கடன் வாங்கினார் ஆனால் அந்த கடனை அவரால் கொடுக்க முடியவில்லை இதனால் கடன் கொடுத்தவர் அவர் மீது வழக்கு தொடர்ந்தார். இதன்போது நான் ரஜினிகாந்தின் சம்பந்தி என்று கஸ்தூரிராஜா கூறியுள்ளார்

இந்த பிரச்சனையில் ரஜினிகாந்தையும் இழுத்து உள்ளார் கடன் கொடுத்தவர். இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் தனக்கும் அந்த கடனுக்கும் சம்பந்தமில்லை என்று கூற கஸ்தூரிராஜா கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டார். இதனால் அன்றைய நாளிலிருந்து ரஜினிகாந்த் வீட்டில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் கஸ்தூரிராஜாவோ அவரது மனைவியோ கலந்து கொள்ளவில்லை . இதனால் ரஜினி வீட்டார்களுடன் அவர்கள் சுமூகமான உறவிலும் இல்லை என பயில்வான் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement