• May 09 2024

தனுஷின் வாத்தி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ராஜா ராணி சீரியல் பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ்  உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முதல் வெளியாகிய திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருந்ததோடு இப்படம் ரசிகர்களிடையே சூப்பல் ஹிட் வெற்றியும் பெற்று வருகின்றது.இப்படத்தை தொடர்ந்து தனுஷ், சம்யுக்தா மேனனுடன் இணைந்து வாத்தி என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.


 நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு G.V.பிரகாஷ் இசையமைக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பில் ராஜா ராணி சீரியலில்  நாயகன் சரவணின் அம்மாவாக சிவகாமி எனும் கேரக்டரில் நடிக்கும் பிரவீனாவும் கலந்து கொண்டள்ளார்.இவர் இப்படத்தில் தனுஷின் அம்மாவாக நடிப்பதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் வாத்தி படத்தில் தனுஷூடன் இணைந்து நடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை பிரவீனா தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வலம் வருகிறது.அந்த ஃபோட்டோவில் வாத்தி கெட்டப்பில் இருக்கும் நடிகர் தனுஷூடன் பிரவீனா நிற்பதை காண முடிகிறது.


Advertisement

Advertisement

Advertisement