• May 06 2024

கடந்த நான்கு நாட்களில் உலகளவில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெற்ற வசூல் விபரம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் அனிரூத்தின் இசையில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளியாகிய திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ்  உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டு இருந்தது.பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது.


முதல் நாள் குறைந்த திரையரங்குகளில் வெளிவந்த இப்படம், மக்களின் சிறந்த வரவேற்பின் காரணமாக திரையரங்க எண்ணிகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படம் கடந்த நான்கு நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 55 கோடியை கடந்து வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் வசூலில் அள்ளிக் குவிக்கும் என நம்பப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement