• May 19 2024

அசீம்கிட்டயே புலம்பிய குயின்சி.. அவரு மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலாக சென்று கொண்டிருப்பதற்கு காரணம், ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் புது புது டாஸ்க்குகள் தான்.

இவ்வாறுஇருக்கையில் இந்த வாரம் நடைபெற்று வரும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஏலியன்களாகவும், ஆதிவாசியாகவும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த ஆட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு தேவைப்படும் அதிசய பூ, ஏலியன்ஸ்களின் பகுதிலும், ஏலியன்ஸ்களுக்கு தேவைப்படும் அதிசயக் கல் பழங்குடிகளின் பகுதியிலும் இருக்கும். அந்த அதிசயக் கல் பழங்குடிகளின் உழைப்பில் தயாரிக்கப்படும். இதனால் ஒருவர் இன்னொருவரது ஏரியாவுக்குள் சென்று அவர்களுக்கு தேவையானதை எடுத்து வருவது இந்த டாஸ்கில் முக்கிய அம்சம்.

மேலும் அப்படி ஒரு சூழலில் ஏலியன்கள் அணியில் இருக்கும் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க, இரவு நேரத்தில் பழங்குடி இன மக்கள் அணியில் இருக்கும் அசீம், யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் இருக்கும் அதிசய பூக்களை திருடவும் செய்கிறார். அத்தோடு பூக்கள் திருடு போனதை காலையில் மணிகண்டா, அமுதவாணன் மற்றும் குயின்சி, தனலட்சுமி உள்ளிட்ட ஏலியன் அணியில் இருக்கும் போட்டியாளர்கள் கவனிக்கவும் செய்கின்றனர்.

அவர்கள் மவுனமாக இருக்க, என்னாச்சு என அசீம் கேட்டதும் விளக்கம் கொடுக்கும் குயின்சி, "எந்த பூவையும் காணல அசீம். எல்லா கல்லையும் எடுத்துட்டாங்க. நைட்டு தான் வந்து எல்லாருக்கும் டயர்டா இருக்கு, யாருக்கும் முடியலன்னு பேசி சத்தியம் வாங்கிட்டு அவங்களும் சத்தியம் பண்ணிட்டு தூங்குனாங்க. அத்தோடு சத்தியம் பண்ணிட்டு எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டாங்க" என ஆதங்கத்துடன் கூறுகிறார்.

அத்தோடு  விக்ரமன் எடுக்கமாட்டோம் என சத்தியம் செய்ததால் அனைவரும் தூங்கியதாகவும் தனலட்சுமி, அமுதவாணன், குயின்சி ஆகியோர் குறிப்பிடுகின்றனர். முடியவில்லை எனக் கூறிவிட்டு இப்படி செய்ததையும் வேதனையுடன் குயின்சி குறிப்பிடுகிறார்.

அப்போது இது பற்றி பேசும் அமுதவாணன், "இத ஃபவுல் கேம்ன்னு சொல்ல முடியாது. அவங்க ஏமாத்தல, பவுல் கேமாவும் ஆக்க முடியாது. கேம் ஆடி இருக்காங்க. ஏமாத்துனது வேற, கேம் ஆடறது வேற. அதுக்கு காரணம் சொல்ல முடியாது. இது அவ்வளவுதான் ஒண்ணும் சொல்ல முடியாது" என சொல்கிறார்.எனினும்  இந்த கருத்தை மணிகண்டாவும் ஒப்புக் கொள்ளும் நிலையில், இதன் பின்னர் பேசும் குயின்சி, அந்த பூவை தெய்வம் ஏற்றுக் கொள்கிறதா என்று பார்ப்போம் என்றும் பேசிக் கொண்டிருக்கிறார்.

மேலும் இரவு நேரத்தில் பூக்களை எடுத்தது அசீம் தான் என்பது தெரியாமலேயே அவர் முன்னிலையில் ஏலியன் அணியினர் பூக்கள் திருடு போனது பற்றி விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது.



Advertisement

Advertisement