• May 06 2024

திருமண நாளை முன்னிட்டு... இரவுப் பார்ட்டியில் கணவருடன் குத்தாட்டம் போட்ட பிரியங்கா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' என்ற படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார். இதன் மூலமாக பல தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்தார். 


இப்படத்திற்கு பின் பாலிவுட் பக்கம் சென்று அங்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். இதனைத் தொடர்ந்து போகப்போக சினிமாவில் அவரின் மார்க்கெட் எகிற ஆரம்பித்து அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.


இவ்வாறாக சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் ஹாலிவுட் நடிகையானதும் ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


அதாவது 2018இல் காதலித்து திருமணம் செய்து பின் படங்களில் முழு கவனம் செலுத்தி வந்த பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றார்.


இந்நிலையில் தங்களது 4ஆவது திருமண நாளை கொண்டாடும் வகையில் இரவு பார்ட்டி வைத்துள்ளனர். அப்போது கிளாமர் ஆடையில் கணவருடன் குத்தாட்டம் போட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

அப்புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement