• Jan 15 2025

அரச தரப்பிலிருந்து அழுத்தங்களா? மம்மூட்டிக்கு தேசிய விருது கிடைக்காததற்குக் காரணம்?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் தான் நடிகர் மம்மூட்டி. இவருக்கு மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் காணப்படுகிறார்கள். தமிழில் இவர் நடித்த திரைப்படங்களும் நல்ல வரவேற்பு பெற்றன.

2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 70 வது தேசிய திரைப்பட விருது கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த நடிகருக்கான விருது நண்பகல்  நேரத்து மயக்கம் படத்திற்காக மம்மூட்டிக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.

இதனால் மலையாள திரையுலகில் பலரும் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம் அடைந்தார்கள். இந்த ஏமாற்றத்தில் மலையாளத் திரையுலக ரசிகர்கள் பலரும் இது குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர். மம்மூட்டிக்கு விருது வழங்காதது குறித்து தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வைரல் ஆக்கினார்கள்.

இந்த நிலையில், இது தொடர்பில் தேசிய திரைப்பட விருதுகள் நடுவர் குழுவில் இருந்த நடிகர் பத்மகுமார் விளக்கம் அளிக்கையில், மம்மூட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் ஒரு நல்ல திரைப்படம். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதில் மம்மூட்டியின் நடிப்பு மிகச் சிறப்பாக காணப்பட்டது. ஆனாலும் உண்மை என்னவென்றால் இந்த படத்தை விருதுக்கு யாருமே சமர்ப்பிக்கவில்லை.


இந்த படத்தின் தரப்பில் இருந்து எந்தவித முன்னெடுப்புகளும் எடுக்கவில்லை. அதற்கு காரணம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை விருதுக்கு யாரும் சமர்ப்பிக்கவில்லை என்பதுதான் உண்மை. இதுக்கு பின்னால் அரசின் அழுத்தங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை இவ்வாறான அழுத்தங்கள் அரசியல் தரப்பில் இருந்து வர   வாய்ப்பில்லை. ஆனால் வேறு வழியிலிருந்து வந்திருக்கலாம் என விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement