• Oct 08 2024

பிரேம்ஜி வருங்கால மனைவி ஒரு வங்கி ஊழியரா? ஆச்சரிய தகவல்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி நாளை இந்து என்ற பெண்ணை திருமணம் செய்ய போகும் நிலையில் அவரது வருங்கால மனைவி வங்கியில் பணிபுரியும் ஒரு அதிகாரி என்று தெரியவந்துள்ளதை அடுத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட வருடங்களாக திருமணம் ஆகாமல் இருந்த பிரேம்ஜி ஒரு வழியாக திருமண அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட நிலையில் அவர் இந்து என்ற பெண்ணை ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்ய போகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.



மேலும் சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது தம்பியின் வருங்கால மனைவி குறித்து சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்றும், அவர் மீடியாவில் வேலை பார்க்கவில்லை என்றும் திருமண புகைப்படங்களை விரைவில் வெளியிடுவோம் என்றும் இது தனிப்பட்ட முறையில் நடைபெறும் திருமணம் என்பதால் திருமணத்திற்கு யாரும் வர வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரேம்ஜி திருமணம் செய்ய போகும் இந்து, வங்கி ஒன்றில் அதிகாரியாக வேலை செய்து கொண்டிருக்கிறார் என்றும் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்கிறார்கள் என்றும் இந்து தான் முதலில் காதலை ப்ரொபோஸ் செய்ததாகவும் சில நாட்களுக்கு காதலித்து, ஒருவருக்கு ஒருவர் மனம் பிடித்த பின்னர் தான் இரு தரப்பு வீட்டில் சொல்லி தற்போது திருமண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement