• Jun 24 2024

’ரயில்’ என டைட்டில் மாற்றப்பட்ட ‘வடக்கன்’ திரைப்படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Sivalingam / 2 weeks ago

Advertisement

Listen News!

‘வடக்கன்’ என்ற டைட்டிலில் தமிழ் திரைப்படம் ஒன்று உருவான நிலையில் இந்த படத்தின் டைட்டிலுக்கு சென்சார் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’ரயில்’ என மாற்றப்பட்டது என்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் டைட்டில் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது புதிய ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாரதி சக்தி இயக்கத்தில் உருவாகியிருந்த ‘வடக்கன்’ திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் திடீரென இந்த படத்தை சென்சார் செய்த அதிகாரிகள் படத்தின் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.

தமிழர்களின் வேலையை வட இந்தியர்கள் பறித்துக் கொள்கிறார்கள் என்ற கதையம்சம் கொண்ட இந்த படத்தில் உணர்வுபூர்வமான பல காட்சிகள் இருக்கிறது என்பதும் ஏற்கனவே சில அரசியல்வாதிகள் வடக்கிலிருந்து வந்தவர்கள் தமிழகத்தை சுரண்டி வருவார்கள் என்று கூறப்படும் நிலையில் சரியான சமயத்தில் இந்த படம் வெளியாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘வடக்கன்’ படத்தின் டைட்டிலுக்கு சென்சார் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ’ரயில்’ என்ற மாற்றப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் டைட்டில் மாற்ற சொன்னதை அடுத்து இலவச விளம்பரம் கிடைத்ததாகவும் ‘வடக்கன்’ என்ற டைட்டில் வைத்திருந்த போது யாருக்கும் தெரியாத இந்த படம் தற்போது சென்சார் அதிகாரிகளால் எல்லோருக்கும் தெரிந்து விட்டது என்றும் அதனால் படத்திற்கு பெரிய அளவு ப்ரமோஷன் செய்ய தேவையில்லை என்றும் கூறப்படுகிறது

பாரதி சக்தி இயக்கத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைர மாலா, ரமேஷ் வைத்யா,  சமீரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு  ஜனனி இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement