• Oct 13 2026

மீண்டும் கொலவெறியில் களமிறங்கும் தனுஷ்.? ஜிவி கொடுத்த கிரேட் அப்டேட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் மட்டும் இல்லாமல் இயக்கத்தாலும் முத்திரையை பதித்து வருகின்றார் தனுஷ். இவர் இயக்கிய முதல் படமான பவர் பாண்டியன் படத்தில் காதலை எடுத்துக்காட்டிய விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதன்பின்பு தனுஷ் இயக்கிய ராயன் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தது.

தனுஷ் இயக்கிய 50வது படமான ராயன் படத்தை தொடர்ந்து தற்போது தனது மூன்றாவது படத்தினை இயக்க ஆரம்பித்து விட்டார் தனுஷ். அதன்படி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகின்றார். அதில் அவருடைய அக்கா மகனை ஹீரோவாக போட்டு கூடவே அனிகா சுரேந்திரன், மாத்யூ  தாமஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் இருந்து வெளியான கோல்டன் ஸ்பாரா பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்தப் பாடலின் வரிகளை தனுஷின் மூத்த மகன் எழுதியிருந்தார். மேலும் அந்தப் பாட்டில் ஜிவி பிரகாஷ் இசையும் பிரியங்கா மோகனின் நடனமும் கொண்டாடப்பட்டது.


இந்த நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இருந்து புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

அதன்படி இந்த படத்தில் இரண்டாவது சிங்கிள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும், அதில் தனுஷ் சூப் ஸோனுக்குள் சென்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள் சூப் ஸோனுக்குள் தனுஷா ? என்று மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தனுஷ் நடித்த 3 படத்தில் கொலவெறி பாடலை தனுஷ் பாடியிருந்தா.ர் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement