• Jan 19 2025

பிச்சைக்காரி மாதிரி இருக்குது .. பலகுரல் ஸ்ருதிக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி புகைப்படங்கள்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் குறித்த மோசமான விமர்சனங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நாயகி மீனா கொஞ்சம் கூட தன்மானம், சுய கவுரவம் இல்லாதவர் என்றும், தன்னை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் எவ்வளவு மோசமாக பேசினாலும், விஜயாவை அவர் ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசாமல் அமைதியாக இருக்கிறார் என்றும், இந்த காலத்தில் இப்படி ஒரு மருமகளா என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் ரோகினியின் கேரக்டரும் விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் விமர்சனத்திற்கு உள்ளாகாத ஒரே கேரக்டர் என்றால் ஸ்ருதி கேரக்டர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளம் கபடம் இல்லாத, மனதில் தோன்றுவதை சொல்லும் இந்த கேரக்டரில் பிரீத்தா ஜனார்த்தனன் நடித்து வரும் நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கும் நாளுக்கு நாள் ஃபாலோயர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதற்கேற்றவாறு ப்ரீத்தி அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு தனது ஃபாலோயர்களை திருப்தி செய்து வருகிறார். அந்த வகையில் சற்றுமுன் அவர் ஒரு கிழிந்த ஜீன்ஸ் ஷார்ட் அணிந்த புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படங்களை ஏராளமானோர் ரசித்து பாசிட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் ஒரு சிலர்  ‘வரவர ரொம்ப மோசமாக உங்கள் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இருக்கிறது, இந்த டிரஸ்ஸில் உங்களை பார்க்கும்போது பிச்சைக்காரி மாதிரி இருக்கிறது’என்று நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால்  இந்த பதிவுக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்களை கண்டு கொள்ளாமல் ப்ரீத்தி கேப்ஷனாக ’ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்’ என்று பதிவு செய்துள்ளார்.


Advertisement

Advertisement