• Jan 19 2025

கீர்த்தி சுரேஷ் உடன் நடித்தால் அரசியலில் அவ்வளவு தான்.. விஜய்க்கும் அதே நிலைமையா? பரவும் வதந்தி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் ஒரு ஹீரோ நடித்தால், அந்த ஹீரோ அரசியலில் வெற்றி பெறுவார்கள் என்ற சென்டிமென்ட் இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கடந்த  ஆண்டு உதயநிதி ஸ்டாலின் உடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ’மாமன்னன்' திரைப்படம் வெளியானது என்பதும் அந்த படம் நல்ல லாபம் கொடுத்தது மட்டுமின்றி அந்த படம் வெளியான சில மாதங்களில் தான் உதயநிதி அமைச்சரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் சமீபத்தில் பவன் கல்யாண் உடன் நடிக்க ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமானதாக செய்தி வெளியான நிலையில் தற்போது பவன் கல்யாண் அரசியலில் வெற்றி பெற்று துணை முதலமைச்சர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் நாயகி என்று கூறப்படும் நிலையில் ஒருவேளை இது நடந்தால் 2026 ஆம் ஆண்டும் விஜய் அரசியலில் வெற்றி பெறுவாரா என்ற கேள்வியை நெட்டிசன்களை எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி விஷால் நடிக்க இருக்கும் அடுத்த படத்திலும் கீர்த்தி சுரேஷ் தான் நாயகி என்று கூறப்படுவதை அடுத்து 2026 இல் அவரும் அரசியலுக்கு வந்தால் அவருக்கும் வெற்றி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் இதெல்லாம் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது போல் தான் என்றும் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்த மற்ற நடிகர்கள் எல்லாம் அரசியலில் வெற்றி பெற்றுள்ளார்களா? என்றும் இது ஒரு மூடநம்பிக்கை பதிவு என்றும் பலர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement