• May 09 2024

6 பெண்களை காதலித்து ஏமாற்றும் பிரபுதேவா…இது என்ன புது டுவிஸ்டா இருக்கே…!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மட்டுமன்றி புகழ் பெற்ற நடனக் கலைஞராகவும் சிறந்து விளங்குபவர் நடிகர் பிரபுதேவா. அதுமட்டுமன்றி இந்தியாவின் 'மைக்கல் ஜாக்சன்' எனவும் புகழப்பட்டு வருகின்றார். இவர் சினிமாவில் ஒரு நடன இயக்குநராக இருந்து 100 இற்கு மேற்பட்ட படங்களிற்கும், நடிகராக இருந்து 70 இற்கு மேற்பட்ட படங்களிலும், இயக்குநராக இருந்து 12 இற்கு மேற்பட்ட படங்களிலும் பணியாற்றியிருக்கின்றார்.

இவ்வாறாக ஒரு நடன அமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று பன்முகக் கலைஞராக சினிமாவில் ஜொலித்து வருகின்றார். இவர் நடித்த படங்களில் 'காதலன்', 'காதலா காதலா', 'மிஸ்டர் ரோமியோ', 'வானத்தை போல', 'ஏழையின் சிரிப்பில்', 'லவ் பேட்ஸ்' போன்றவை இன்றும் நம் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கின்றன.

இவ்வாறாக பல படங்களில் நடித்து வருகின்ற பிரபுதேவா தற்போது 'பஹீரா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். அத்தோடு சைக்கோ கதையம்சத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள பிரபுதேவாவிற்கு ஜோடியாக 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அதாவது ஜனனி, சாக்ஷி அகர்வால், காயத்ரி, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், சஞ்சிதா ஷெட்டி போன்றவர்கள் நடித்துள்ளனர். படத்தில் இவர்கள் 6 பேரையும் காதலித்து ஏமாற்றும் ஒரு சைக்கோவாக பிரபுதேவா நடித்திருக்கின்றார்.

இது ஒரு விதமான புதுக் கதையினை மையமாகக் கொண்டிருப்பதனால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது அதிகளவிலான எதிர்பார்ப்புக் கிளம்பியிருக்கின்றது. ஒரு ஹீரோயின் என்றாலே அந்தப் படத்தை பார்க்காமல் விட மாட்டாங்க. இதில 6 ஹீரோயின்கள் என்றால் சும்மா விடுவார்களா? பார்ப்பம் பொறுத்திருந்து படம் எப்பிடியிருக்கின்னு..!

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement