• May 07 2024

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாஸான ஆட்டம் போட்ட ரஹ்மான் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின்

stella / 1 year ago

Advertisement

Listen News!

180 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 2000 செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்குபற்றவுள்ள 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மொத்தமாக நாட்பது நாட்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் 26 மாநிலங்களில் உள்ள சுமார் 75 நகரங்களில் பயணித்து, பின்னர் இறுதியாக மாமல்லபுரம் வந்தடைய உள்ளது.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக பிரம்மாண்ட ஏற்பாடுகளும் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் ஆரம்ப விழாவுக்கான ஏற்பாடுகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் Anthem வீடியோ, தற்போது வெளியாகி உள்ளது.இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள இந்த பாடலை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை இமைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது வெளியிட்ட வீடியோவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரும் இணைந்து நடித்து உள்ளனர்.

இவர்களுடன் இயக்குநர் ஷங்கரின் மகளும், நடிகையுமான அதிதி ஷங்கரும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார்.

மகாபலிபுரத்தில் பரதநாட்டியம் காட்சிகளும், சென்னை நேப்பியர் பாலத்தில் ரஹ்மான் மற்றும் ஸ்டாலின் தோன்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. பாடிக் கொண்டே குட்டி குட்டி ஸ்டெப்களை ரஹ்மான் போட, மறுபக்கம் மாஸான நடையுடன் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இந்த வீடியோவில் தோன்றுகிறார். இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement